அடிபட்டு பல் உடைந்து போய் இருந்தாலோ,ஆழமா பல்லில சொத்தை வந்து வலி இருந்தாலோ பல் டாக்டர்கிட்ட போனா Root Canal Treatment பண்ணி Cap போடுங்கனு சொல்லுவாங்க…
இது வரை OK
ஆனா confusion ஏ இதுக்கு பிறகு தான் Start ஆகும்.
எந்த Cap choose பண்ண?
பழைய பல் மாதிரி Strong ஆ இருக்குமா
Colour மாறாம இருக்குமா
கடிச்சு சாப்பிட்டால் உடைஞ்சுருமா
நேர்ல/ போட்டோல பார்க்க வித்தியாசமா தெரியுமா
முகத்தோட அமைப்பே மாறிடுமாணு எல்லாம்..
ஒரு Shirt / Saree வாங்க ஒரு ட்ரெஸ் கடைக்கு போனா எப்படி நிறைய Colours, different material & Quality, வேற வேற Range, different budget ல இருக்குமோ அதே மாதிரி பல் Cap லயும் நெறைய type இருக்கு..
சாதாரணமா பார்க்கும் போது எல்லாமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியே தான் இருக்கும்..
ஆனா அதோட material, Life, Strength, finish, செய்ய கூடிய method னு எல்லாமே வேற வேற தான்..
Acrylic Crown
பொதுவா Temporary Crown ஆ use பண்ண கூடிய பல் Cap. இதோட Strength ம் கம்மி, Colour ம் ஈஸியா மாறிடும்.
Ceramic Crown
Porcelain fused to Metal Crown (PFM) பெரும்பாலானவர்கள் உபயோகிக்க கூடிய பல் cap. Metal support இருக்கிறதால Strength ம் கூட Normal பல் கலர்ல இருக்கும்.
E- max (Lithium di silicate Crown)
Front பல் artificial வச்சு இருக்கிறதே தெரிய கூடாது, Natural ஆ இருக்கணும்னு நெனைக்கிறவங்க சாய்ஸ் இது தான்.
Zirconia (Metal free Crown)
Strength ம் கூட பார்க்கவும் Natural ஆ இருக்கும்.
உங்க பல் டாக்டர் எந்த Crown உங்களுக்கு Suitable ஆ இருக்கும்னு Suggest பண்னுவாங்க..
Dr. Shiva Sankar is the Clinical Director and Orthodontist at Sakti Dental Clinic, Tirunelveli with over 18+ years of experience in dentistry. He is also a Professor in the Department of Orthodontics, Rajas Dental College affiliated to, Dr.MGR Medical University. Dr. Shiva Sankar frequently publishes research papers in leading scientific national and international journals.