பல் இல்லாத இடத்தில் ஏன் கண்டிப்பா செயற்கை பல் வைக்கணும் ?

Why Replacement of missing tooth is important?

அது தான் 32 பல்லுல மத்த பல் எல்லாம் நல்லா இருக்கே, 1 இல்ல , 2 பல் இல்லாட்டா என்ன?அதுவும் பின் பல் தானே, வெளிய தெரியாதுனு தான் நெறைய பேர் நினைக்கிறாங்க..

ஒரு சூப்பர் மார்க்கெட்ல அழகா ஒன்னு மேல ஒன்னுன்னு Tooth Paste அடுக்கி வச்சு இருப்பாங்க..

பார்த்து இருப்பீங்க..

அதுல நடுல இருந்து ஒரு Tooth paste ஐ எடுத்தா என்ன நடக்கும் னு யோசிச்சு பாருங்க..

அதோட Balance/ Equilbrium (சமநிலை) மாறி ஒன்னுக்கு மேல ஒன்னா சரிய ஆரம்பிக்கும்..

அதே மாதிரி தான், பல் எடுத்த இடத்தில் வேற பல் வைக்காமல் விட்டா பக்கத்தில் உள்ள பல் அந்த இடத்தில் நகர/ சரிய ஆரம்பிக்கும்..

பல் எடுத்த இடத்தில் உள்ள எலும்பும் , ஈறும் தேய்ந்து வலுவிழந்து இருக்கும் அதனால் தான் பக்கத்தில் உள்ள பற்கள் சரிய ஆரம்பிக்கும்..அதனால் பல் எடுத்த / பல் விழந்த இடத்தில் சிறிது நாட்களிலே செயற்கை பற்கள் பொருத்துவது அவசியம்.

செயற்கை பற்கள் ஏன் அவசியம்?

பின் பற்கள் இல்லாமல் இருந்தால் பார்க்க வேணா வெளிய தெரியாது,ஆனா கடிச்சு சாப்பிட எவ்வளவு கஷ்டம்னு அவங்களுக்கு மட்டும் தான் தெரியும்..

மற்ற பற்கள் பல் எடுத்த அந்த இடைவெளியில் நகர்வதால் Occlusion ( மேல்/கீழ் பற்களின் இனணவு) மாறுவதால் தாடை எலும்புகளில் வலி வர வாய்ப்பு உண்டு.

கன்னம் மற்றும் உதடுகளுக்கு போதுமான support இல்லாமல் குழி விழுந்து வயதான தோற்றத்தை ஏற்படுத்தும்.

முன் பற்கள் இல்லாமல் இருந்தால் பேச்சு உச்சரிப்பில் தெளிவு இருக்காது..

விழுந்த பற்களையும் , இழந்த புன்னகையும் திரும்ப பெற செயற்கை பற்கள் பொருத்தி உங்கள் பல் மருத்துவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்..

Removable Denture னு கழட்டி மாடுற மாதிரி பல் செட்டா வைக்கலாம் .


Fixed Method ல Bridge னு பக்கத்து பல்லு support வைச்சு பல் செட்டா வைக்கலாம் .இதுக்கு பக்கத்து பல்லோட size ஐ குறைச்சு Tooth Preparation பண்ணி Fixed ஆ பல் வைக்கலாம் .


Fixed Method ல Dental Implant னு Artificial ஆ பல் வேர் Fix பண்ணி அதுக்கு மேல Cap னு பல் வைக்கலாம் .

Dr. Shiva Sankar

Dr. Shiva Sankar is the Clinical Director and Orthodontist at Sakti Dental Clinic, Tirunelveli with over 18+ years of experience in dentistry. He is also a Professor in the Department of Orthodontics, Rajas Dental College affiliated to, Dr.MGR Medical University. Dr. Shiva Sankar frequently publishes research papers in leading scientific national and international journals.