டாக்டர்,எனக்கு 45 வயசு தான் ஆகுது , பல் தானா ஓவ்வொணா ஆடி விழ ஆரம்பிச்சுட்டு கவலை உடன் சொன்ன அவரே தொடர்ந்தார்..
பின்னாடி பல் ஆடி விழுற வரை நான் அதை பெருசா எடுத்துக்கலை..
என்றவரை இடைமறித்து…
“பின்னாடி பல் இல்லாட்டா கண்டிப்பா சாப்பிட கஷ்டமா இருந்து இருக்குமே “ என்றேன்.
ஆமா சார் , அது நான் adjust பண்ணி சாப்பிட்டுருவேன்.
ஆனா இது வரை எனக்கு பல் வலினு வந்தது இல்லே சார், இப்போ தான் first time ஆ Dentist கிட்ட வரேன்..
“ Front ல பல்லும் ஆடுது இப்போ அதுவும் விழந்துட்டா Office போக கஷ்டமா இருக்கும்லா சார் .”என்றார்.
சார், உங்களுக்கு சுகர் ஏதும் இருக்கா , செக் பண்ணி இருக்கீங்களா ?! என்றேன்.
இல்ல டாக்டர், மாசம் முன்னாடி கூட செக் பண்ணி இருக்கேனே.. எனக்கு சுகர் இல்லை என்றார்..
First பல் எப்போ சார் விழுந்தது? என்றேன்.
அது ஒரு 2-3 வருஷம் முன்னாடியே விழ ஆரம்புச்சுட்டு என்றார்.
“நீங்க அப்போவே பல் டாக்டர் கிட்ட செக் பண்ணலயாணு “ கேட்டேன்.
எனக்கு தான் பல்ல ஏதும் வலியே இல்லையேனு விட்டுடேன், தவிர கொஞ்சம் ஊசினாலும் பயம் சார் என்றார்.
“சார் , பல்ல cavity அதாவது சொத்தை ஆகி இருந்தா இல்ல பல் உடைஞ்சு இருந்தா பல்ல வலி தெரியும், உங்களுக்கு இருக்கிறது பல் ஈறு Problem சார் “.
உங்களுக்கு brush பண்ணும் போது ரத்தம் வருமா சார்.
ஆமா சார் அப்போ அப்போ வரும் .
எத்தனை வருசமா அப்படி இருக்கு
சரியா தெரியல சார் , ஒரு 8-10 வருஷமா இருக்கும்னு நெனைக்கிறேன்.
டாக்டர் கிட்ட Consult பண்றதுக்கு முன்னாடி நீங்களே Easy ஆ கண்டுபிடிக்க கூடிய First Symptom ஆ அது தான் சார்..
ஒருத்தருக்கு பல் ஈறு Weak ஆகுதுனு நீங்களே கண்டு பிடிக்கலாம்.
“அப்போவே நீங்க பல் டாக்டர் கிட்ட வந்து பார்த்து இருந்தா நாங்க பல் Cleaning -Scaling னு பண்ணி இருந்தா இப்படி ஈறும், எலும்பும் weak ஆகி பல் விழுந்து இருக்காது” என்றேன்
இதே மாதிரி உங்களுக்கும் பிரஷ் பண்ணா Gums ல இருந்து Bleeding வந்தா கண்டிப்பாக உங்களுக்கு பக்கத்தில் இருக்கிற/ தெரிஞ்ச Dentist கிட்ட Consult பண்ணுங்க. இது போல மேலும் பல் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை தெரிந்து கொள்ள Dental blog-Tamil கிளிக் செய்யவும்.