Sakti Dental & Orthodontic Clinic

நிஜமான பல்லா , பொய் பல்லானு வித்தியாசமே தெரியாது I கர்ணன் I Karnan Movie grand making

karnan movie grand makingKarnan-  Dhanush,director mariselvaraj movie- grand making
Image credit- Filmibeat

“டாக்டர், ஒரு பையனுக்கு பல் நல்ல அழகா வரிசையா முத்து மாதிரி இருக்கு, அதை கொஞ்சம் நல்லா எத்தி இருக்கிற மாதிரி , தூக்கி இருக்கிற மாதிரி மாத்தணும்.”  என்று போனில் கேட்டது வள்ளி நாயகம் , கர்ணன் படத்தில் தனுஷின் நண்பராக நடித்து இருப்பார் ..

கரெக்ட்டா தான் வாசிச்சோமானு  திரும்ப வாசிக்கிறீங்களா .

நீங்க கரெக்ட்டா தான் வாசிச்சீங்க .

என்னடா இது, எல்லாரும் பல் தூக்கி இருக்கு அதை சரி பண்ண  முடியுமானு தானே பல் டாக்டர் கிட்ட  கேட்பாங்க . இப்படி  யாரு கேட்பாங்கன்னு நெனைக்கறீங்களா ?

வள்ளி – வழக்கறிஞர் , பழைய பாரம்பரிய பொருட்களை அடுத்த சந்ததிகளும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று பொக்கிஷமாக பாதுகாக்கும் கலா ரசிகர், நடிகர்.பரியேறும் பெருமாள், கர்ணன் படப்பிடிப்பின் போது பம்பரமாக சுழன்று அத்தனை  வேலைகளையும் முன் நின்று செய்த உதவியாளர். டைரக்டர்  மாரி செல்வராஜின் நெருங்கிய நண்பர் .

நானும் உங்களை தான் மாதிரி ஆச்சரியமாக திரும்ப கேட்டேன்.

” இல்ல டாக்டர், கர்ணன் படத்திலே ஒரு சின்ன பையன் Character வரும், 10 வருஷம் கழிச்சு கிளைமாக்ஸ்ல அந்த பையனே பெருசா இருக்கிற மாதிரி காண்பிக்கணும், அதே மாதிரி முக ஜாடையோட ஒரு பையன்Select பண்ணிட்டோம். ஆனா இந்த பையனுக்கு பல் நல்லா  வரிசையா இருக்கு , அந்த சின்ன பையனுக்கு பல் ரொம்ப தூக்கி இருக்கும், அதான் டைரக்டர்  உங்க கிட்ட கேட்க சொன்னாரு ..

“சூப்பர் சார், அந்த சின்ன பையன்Photos கொஞ்சம் வேற வேற angle ல வேணும், அந்த பெரிய பையன் நேர்ல வரணும் அதே மாதிரி Artificial பல் ரெடி பண்ணிடலாம்” என்றேன்.

“டாக்டர், கிளைமாக்ஸ் ஷூட்டிங் சென்னைல, அதனால நாளைக்கு காலையில 10 மணிக்கு அந்த பையன் உங்க கிளினிக்ல நிப்பான், நீங்க உடனே ரெடி பண்ணி கொடுங்க, உங்க Work முடிஞ்ச உடனே அவன் சென்னை கிளம்பனும் “என்றார்.

Grand making of Karnan- Karnan movie behind the scenes

மறுநாள் காலை சொன்ன மாதிரியே அந்த பையன்  வந்து இருந்தான். Tooth Paste  Ad ல எல்லாம் வர மாதிரி அவ்வளவு வரிசையான பற்கள், தவிர  உதட்டின் அமைப்பும்(Lip Morphology) பற்களே வெளிய தெரியாத அளவு மறைத்து இருந்தது.

வள்ளி  அனுப்பி  வைத்து இருந்த போட்டோ எல்லாம் பார்த்து அதே மாதிரி கழட்டி மாட்டும் படி ஒரு  Artificial பல் செய்து அனுப்பி வைத்தேன். .

கர்ணன் வெளிவந்த முதல் நாள் காலையிலேயே அமோக ஆதரவு மற்றும் வரவேற்பு குறித்துWhatsapp ல் செய்திகள் குவிந்த வண்ணம் இருந்தன.

ராம்Theatre ல் இரவு 1.30 மணிக்கும் கூடி நின்ற கூட்டமே படத்தின் வெற்றியை பறை சாற்றும்.

எத்தனை Theatre கள் வந்தாலும் ராம் Theatre ல் படம் பார்க்கும் அனுபவமே தனி. ஒளியும் ஒலியும், இருக்கை வசதியும்  அத்தனை பிரம்மாண்டமாய்  நேர்த்தியாய் வேறு எங்கும் பார்க்க முடியாது . அந்த திரை Experience காகவே இன்றும் புது படங்கள் என்றால்  சென்னையில் இருந்து திருநெல்வேலி வந்து படம் பார்க்கும் நண்பர்களும்,உறவினர்களும் இருக்கிறாரகள் .

இரண்டு வருடங்களுக்கு முன்னால்  டைரக்டர் மாரி செல்வராஜ் என் கிளினிக் வரும் போது அத்தனை எளிமையாய் எந்த வித  பந்தாவும் இல்லாமல் ஒரு சாதாரண நபர் போல தான் வந்து சென்றார்.Celebrity Dentist

Director mariselvaraj- Satisfied Sakti dental Client

அப்போது நான் பரியேறும் பெருமாள் படம் கூட பார்க்க வில்லை. அதற்கு பிறகு தான் படம் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தது.தமிழ் திரைஉலகின் ஒரு மிக சிறந்த படைப்பாளி அவர் என்பதை அந்த படத்திற்க்கு அவர் வாங்கி குவித்த விருதுகளே சொல்லும். அப்போதே கர்ணன் குறித்தும் தனுஷ் தான்  ஹீரோ என்றும் சொல்லி இருந்தார்.

Celebrity Dentist

கர்ணன் ஷூட்டிங் திருநெல்வேலியில் கருங்குளம் அருகே நடக்கும் போது மீண்டும்  சிகிச்சைக்காக வந்த  போதும் அத்தனை களைப்பாக Dental Chair ல் கண் அயர்ந்து தூங்கி இருப்பார். அத்தனை கடும் உழைப்பாளி.

எத்தனை பேரின் உழைப்பு

எத்தனை பேரின்  வாழ்க்கை

எல்லா எத்தனையையும்

எல்லா எத்தன்களையும்

இணைக்கும் மையப்புள்ளி இவர். .

சினிமா  பலருக்கு  கனவு

இவர் போன்ற சிலருக்கு தவம்.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அந்த Artificial பல் வைத்த பையன் வந்தான், ஒரு 4-5 செகண்ட் காண்பிக்கும் காட்சியில் கூட அத்தனை கட்சிதமாக இருக்க வேண்டும் என்பதில் சினிமா மீதான அவரின் தீரா காதல் தெரிந்தது.

best dentist in Tirunelveli
Artificial teeth placed for karnan movie in Sakti Dental clinic ,Tirunelveli.

நீங்கள் படத்தை எத்தனை முறை பார்த்து இருந்தாலும் நான் சொல்லும் இந்த விஷயத்தை கவனிக்க தவறி இருப்பீர்கள் . படத்தில் குதிரையுடன் வரும் அந்த சிறுவன் 10 வருடம் கழித்து பெரியவனாக மாறி இருப்பான் என்று அதே மாதிரி முக அமைப்பு,நிறம்,ஹேர் ஸ்டைல் உடன் இருக்கும் இந்த  பையனை  அத்தனை கச்சிதமாக தேர்ந்து எடுத்து இருப்பார் .

அவனுக்கு டயலாக் எதுவும் இல்லாத போதும்,கூட்டத்தில் ஒருவனாக அவன் நின்ற போதும்  அவன் பல் அமைப்பில் கூட சிறிய  வித்தியசமாக தெரிந்து விட கூடாது என்று அத்தனை நுட்பமாக Character Detailing செய்து இருந்தது ஆச்சிரியம் அளித்தது .

Dr. Shiva Sankar

Dr. Shiva Sankar is the Clinical Director and Orthodontist at Sakti Dental Clinic, Tirunelveli with over 18+ years of experience in dentistry. He is also a Professor in the Department of Orthodontics, Rajas Dental College affiliated to, Dr.MGR Medical University. Dr. Shiva Sankar frequently publishes research papers in leading scientific national and international journals.