திருநெல்வேலி உருவான தினம் இன்று …
இப்படினு ஒரு Whatsapp Message , வருஷத்துல 365 நாளும் ஏதாவது ஒரு group ல் யாராவது ஒரு நபர் இதை உண்மை என்று Forward செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
நல்லா யோசிச்சு பார்த்த நெல்லை மண் மீது கொண்ட பற்று தான் அதை உண்மையா, பொய்யா என்பதை கூட தெரிந்து கொள்ளாமல் ஒரு FAKE MESSAGE ஐ உண்மை என்று நம்பி forward செய்ய வைக்கிறது .
இது போன்ற போலி / வதந்தி செய்திகள் முன்பு எல்லாம் அரசியல், ஜாதி, மதம் குறித்தே திட்டமிட்டு சிலரால் அதிகமாக பகிரப்பட்ட காலம் போய் இப்போது எல்லாம் மருத்துவ சிகிச்சைகள், மாற்று மருத்துவம் என்று அறிவியல், மருத்துவ உலகத்தை குறி வைத்தே பரப்பபடுகிறது.
ஆனால் இப்போது இது அதிகமா பகிரப்படுவதற்கு காரணம் நம்மை போன்ற சாதாரண நபர்கள் தான்.
சோசியல் மீடியா வில் வரும் அத்தனை செய்திகளும் உண்மை என்று நம்பும் நபர்களால் இது போன்ற Fake Message கள் அதிகமாக பகிரப்படுகிறது .
கொய்யா இலையை சாப்பிட்டால் பல் வலி சரி ஆகும் இப்படி ஒரு Message உங்களுக்கு வருதுனு வச்சுக்கோங்க , யாருக்கோ ஒருத்தருக்கு இது கண்டிப்பா useful ஆ இருக்கும் என்ற நல்ல எண்ணத்தில், அக்கறையில் அதன் உண்மை தன்மையை தெரிந்து கொள்ளாமல் உங்களை Forward செய்ய வைக்கிறது .
இதை உண்மை என்று நம்பி பல் வலிக்கு, பல் மருத்துவர்களிடம் ஆரம்ப கட்டதிலேயே ஆலோசனை பெறாமல் பல் முழுவதுமாக சேதமடைந்த பின்பு அதை காப்பாற்றவே வழியில்லாத சமயத்தில் தான் வருகிறார்கள்.
அந்த மாதிரி whatsapp ல் தற்போது அதிகமா பரவி வரும் இன்னொரு Fake Message – TOOTHPASTE Pack ல் உள்ள கலர் code கள் குறித்தது.
Tooth paste Colour code
இயற்கை(Natural) முறையில் தயாரித்தது – Green code
இயற்கை(Natural) 75% செயற்கை(Chemical) 25% – Blue code
செயற்கை(Chemical) 75% இயற்கை(Natural) 75%- Red code
முழுவதுமே செயற்கை(Fully Chemical) – Black code
நண்பர் வெங்கட்ராமன் இந்த Whatsapp மெசேஜ் ன் உண்மைத்தன்மையை தெரிந்து கொள்வதற்காக கேட்டு இருந்தார் .
இந்த கலர் code/bar டூத் பேஸ்ட் pack ல எங்க இருக்கும்னு கேட்கறீங்களா?
Tooth paste pack ல கீழ் பகுதியில்(End ) இருக்கும் .
உண்மை என்னனா இந்த Colour Code க்கும் Toothpaste ல என்ன ingredients இருக்கு அப்படிங்கிறதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை .
ஓகே , அப்போ இந்த marking எதை குறிக்குதுனு கேட்கறீங்களா?
Toothpaste manufacture செய்யும் போது ஒரு விதமான Light Sensor அந்த pack end ஐ mark செய்யவும் cut செய்து Seal செய்யவும் தான் உதவுகிறது.
எதனால் இந்த Fake Message , Whatsapp ,Fb ல் அதிகமாக பகிரப்படுகிறது என்றால் சதுரங்க வேட்டை திரைப்படத்தில் சொல்லும் அதே Technic தான் .
“ நாம சொல்ற எல்லா பொய்-லயும் ஒரு உண்மை இருக்கணும்.”
அதனால் தான் மக்கள் எளிதாக இதை உண்மை என்று நம்புகிறார்கள் .
சரி அந்த உண்மை என்ன னு கேட்கறீங்களா?
உணவு பொருட்கள்(Food items) மட்டும் அல்லாமல் எல்லா விதமான FMCG Products களிலும் (சோப்பு,ஷாம்பூ,டூத் பேஸ்ட் ,காஸ்மெட்டிக் ) பச்சை நிற vegetarian ingredients யும் , சிகப்பு நிறம் Non vegetarian Ingredients இருப்பதையும் குறிக்கிறது .
என்னது டூத் பேஸ்ட் ல கூட இந்த மாதிரி Green or red box மார்க்கிங் இருக்குமான்னு கேட்கறீங்களா.
கண்டிப்பா இருக்கும் . உங்க டூத் பேஸ்ட் எடுத்து செக் பண்ணி பாருங்க .
Plant Derived Glycerol ஆக இருந்தால் Green dot ம், Animal Derived products (Glycerine from Animal Fats ) இருந்தால் Red dot ம் இருக்கும் .
நிறைய பிஸ்கட் பாக்கெட்,சாக்லேட்களில் இந்த Red Dot /Green dot பார்த்து இருப்பதால் இந்த Red, Green, Blue, Black marking உம் Natural & Chemical message ம் உண்மை என்று நினைத்து பெரும்பாலோனோர் இது Fake message என்று உணராமல் Forward செய்கிறார்கள்.
இனொன்று நம்ம ஊரில் Chemical னால எல்லாமே கெட்டது, Natural , Organic தான் Best என்று மக்கள் நம்புவதும் ஒரு காரணம். .
தினமும் இது போன்ற மருத்துவ குறிப்புகள் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான போலி செய்திகள் பரப்பப்படுகிறது . இது போன்ற Fake Message களை உண்மை என்று நம்பி மருந்து ,மாத்திரைகளை முழுவதுமாக ஒதுக்கிவிட்டு பாட்டி வைத்தியம்,வீட்டு மருத்துவம் ,இயற்கை மருத்துவம் தான் சரி என்று மக்களின் மனோபாவம் மாறி வருகிறது.
மருத்துவ துறையில் வதந்திகள் ,புரளிகள் பரவாமல் தடுப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.நண்பர் வெங்கட்ராமன் கேட்டது போல அந்த அந்த துறையில் தெரிந்த நண்பர்களிடம் உறுதிப்படுத்தி விட்டு மருத்துவ குறிப்புகளை பகிருங்கள்.
இல்லையேல் தசாவதார திரைப்படத்தில் கமல் சொல்லும் காஸ்மிக் Theory , butterfly effect போல எங்கோ நடக்கும் ஒரு அசம்பாவிததிற்கும் நம்மையும் அறியாமல் நாம் காரணமாகி விடுவோம்.
இது போன்று பல் சம்பந்தப்பட பிரச்சனைகள், நவீன பல் மருத்துவ சிகிச்சைகள் குறித்து தெரிந்து கொள்ள எங்கள் Sakti Dental – Main Blog பகுதியை கிளிக் செய்யவும்.
Dr. Shiva Sankar is the Clinical Director and Orthodontist at Sakti Dental Clinic, Tirunelveli with over 18+ years of experience in dentistry. He is also a Professor in the Department of Orthodontics, Rajas Dental College affiliated to, Dr.MGR Medical University. Dr. Shiva Sankar frequently publishes research papers in leading scientific national and international journals.
Very informative and eye opener… Thanks sir
பயனுள்ள தகவல்.
எழுத்து நடை அருமை.
Your blog has undoubtedly become a valuable resource for me, and I have already shared it with my friends and family. Your dedication to educating readers on dental health is commendable, and I am grateful for the effort you put into creating such informative content.