Root Canal Treatment

பல் வேர் சிகிச்சை ஒரு பார்வை.

By Dr. Shiva Sankar

Carrots

பல் வலி/ பல் எடுப்பதற்கு முன் கண்டிப்பாக இதை பாருங்கள்.

பல் வேர் சிகிச்சைஎன்றால் என்ன?

பல் சொத்தை, அடிபட்டு உடைந்த பற்களை பிடுங்காமல் பாதுகாக்க உதவும் பல் சிகிச்சை முறை.

பற்களை பாதுகாக்க உதவும் Root Canal சிகிச்சை

பற்களை பாதித்த பாக்டீரீயாக்களை ( Infected Pulp) அகற்றி பல் வலி & வீக்கத்தை தடுக்கும்.

பல் வேர் சிகிச்சை எவ்வாறு செய்யப்படும்?

பல் மற்றும் பல் ஈறு பகுதி மரத்து போக ஊசி போட்டு பல்லின் மேல் பகுதியில்  சிறு துளையிட்டு பல்லின் உட்புறம், வேர் பகுதியை எந்த வித வலியும் இல்லாமல்  க்ளீன் செய்யப்படும்.

பல்வேர் சிகிச்சை செய்த பற்களை பாதுகாப்பது எப்படி?

வேர் சிகிச்சை செய்த பற்களில் சிறு பிளவுகள், உடைந்து (fracture) போகாமல் தடுக்க கேப்( Crown) போடுவது அவசியம்.

பல் வேர் சிகிச்சை செய்ய எத்தனை முறை பல் டாக்டரிடம் செல்ல வேண்டும்?

பல் வேர் சிகிச்சை பாதிப்பின் தன்மையை பொறுத்து 1-2 sittings, பல் கேப்( Crown) செய்ய 2 sittings தேவைப்படும்.