Teeth Health
By Dr. Shiva Sankar
வாய் மற்றும் பற்களின் ஆரோக்கியம் ஒருவரின் முழு உடல் ஆரோக்கியத்திற்கு அவசியம். காலையில் பிரஷ் செய்வது போல இரவிலும் தினமும் பிரஷ் செய்வதின் 5 சிறந்த பயன்கள்
பல் சொத்தையை எதிர்த்து போராடுதல்
இரவிலும் பற்களை பிரஷ் செய்வது பற்களுக்கு இடையில் சிக்கியுள்ள உணவு பொருட்களை அகற்றி பல் சொத்தை மற்றும் சிதைவு அபாயத்தைக் குறைக்கிறது
ஈறு நோயைத் தடுக்கவும்
தொடர்ந்து இரு வேலைகளிலும் பிரஷ் செய்வது ஈறுகளின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், ஈறு நோய்க்கான வாய்ப்புகளைக் குறைக்கவும் உதவுகிறது.
புத்துணர்வு சுவாசம்:
ஒவ்வொரு முறை பிரஷ் செய்யும் போதும் உங்கள் வாய், நாக்கு மற்றும் பற்களில் படிந்து இருக்கும் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை திறம்பட நீக்குகிறது.
ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான உடல்
தினமும் இரண்டு முறை பல் துலக்குவது பல் வேறு உடல்நலப் பிரச்சனைகளை தடுக்க உதவுகிறது.
பளிச்சிடும் பற்கள்:
ஒரு நாளைக்கு இரண்டு முறை பிரஷ் செய்வது உங்கள் பற்களை முத்து போல பிரகாசிக்க செய்யும் அழகான,ஆரோக்கியமான புன்னகையை அளிக்கிறது.