ஞானப்பல் முளைப்பதால் பல் வலியா- கண்டிப்பா இதை படிங்க | Impacted wisdom tooth – To wait or to remove?- In Tamil.

டாக்டர், ஒரு 2️⃣ 🗓 மாசத்துக்கு முன்னாடி வாய் 👄 திறக்க கஷ்டமா இருக்கு, எச்சில் விழுங்க , சாப்பிட்ட கூட முடியல, வலி இருக்குனு பார்க்க வந்து இருந்தேன்.‼️
2-3 tablets 💊💊கொடுத்து இருந்திங்க,உடனே வலி சரி ஆகிடுச்சு இப்போ திரும்பவும் வலிக்குதே ⁉️
சொன்னது ஒரு 20 வயது இளம் பெண்..
சாதாரண காய்ச்சல் தலைவலின்னா மருந்து, மாத்திரை சாப்பிட்டாலே சரி ஆகிடும்,பல் வலியை பொருத்த வரை Treatment உம் கண்டிப்பாக தேவைப்படும், Treatment பண்ற வரை Infection, வலியை குறைக்க தான் Tablets 💊 னு சொல்லி இருப்பேன் அம்மா…✅
ஆமா டாக்டர், Lower jaw ல last ஒரு Wisdom Tooth 🦷முளைக்குதுனு சொல்லி இருந்திங்க..
Impacted wisdom tooth
அப்படினா X – ray செக் பண்ணி அந்த பல் position எப்படி இருக்குனு பார்த்தோமா⁉️
ஆமா டாக்டர், X-ray check பண்ணிட்டு பல்லு ❌cross ஆ இருக்கு, அந்த பல்லை remove பண்ண வேண்டி இருக்கும் னு சொல்லி இருந்திங்க..
wisdom tooth removal
எங்க வீட்டுல யாருக்கும் இது வரை பல் எடுத்தது இல்லை, அவ சின்ன பொண்ணு 👩‍🦰 தானே பல் எல்லாம் எடுக்க வேண்டாம்❌.
வலிக்கு மாத்திரை 💊மட்டும் கொடுங்க போதும், சொன்னது கூட வந்து இருந்த அந்த பெண்ணின் பாட்டி..
எந்த டாக்டரும் 👨‍⚕️👩‍⚕️பார்த்த உடனே பல் எடுக்கணும் னு சொல்ல மாட்டாங்க அம்மா, இப்போ எல்லாம் பல் சொத்தை ஆகி வலி னு வந்தாலே Root Canal பண்ணி பல்லை 🦷காப்பதுறோம்னு தான் சொல்லுவோம்..
பல்லோட Position வச்சு தான் அந்த பல் தானா முளைக்குமா ? Wait பண்ணணுமா? இல்ல பல்லை எடுக்கணுமா னு பல் டாக்டர்ஸ் சொல்லுவாங்க அம்மா.
ஆனாலும், நீங்க சொல்றது சரி தான் அந்த ஞானப்பல் முளைக்கும் போது நிறைய பேருக்கு வலி இருக்கும், அப்புறம் சரி ஆகிடும்.
அந்த பல்லு straight ⬆️ ஆ இருந்தா அது தானா முளைக்க chance இருக்கு, அதனால மாத்திரை 💊 கொடுத்து பார்ப்போம், சிலருக்கு அதுலயே சரி ஆகிடும்.✅
அதுலயும் வலி சரியாகடா பல்லை Cover பண்ணி இருக்கிற சதையை light ஆ Cut ✂️பண்ணா பல் Easy ஆ முளைக்கும்.
ஆனா உங்க பேத்திக்கு பல்லு Cross ஆ ↖️ இருக்கு அம்மா.இந்த பல்லு முளைக்க ஆரம்பிச்சா இடம் இல்லாம பக்கத்து பல்ல தான் அழுத்தும்.
அதனால பக்கத்து பல்ல வலி வரலாம், Front ல பல்லு கொஞ்சம் நெருக்கமா ஆகலாம்.
சில பேருக்கு கடைசி 2 பல்லுக்கு 🔁 நடுல சாப்பாடு மாட்டி அதுக்கு முன்னாடி இருக்கிற நல்ல பல்லுலயும் சொத்தை வந்துடும்.. என்றேன்.
அந்த காலத்துல எல்லாம் யாருக்கும் இந்த மாதிரி எல்லாம் இல்லையே டாக்டர்⁉️
📌 நீங்க சொல்றது சரி தான் , இந்த மாதிரி பல் முளைக்காம இருக்க நிறைய காரணம் இருந்தாலும் முக்கியமா சொல்லணுமனா, அந்த காலத்துல சாப்பாடு முறையே வேற, நல்லா Hard, ஆ Fiber foods ஆ சாப்பிட்டு கடிச்சு, சவைத்து தாடை எலும்பு எல்லாம் பெருசா இருந்தது, ஆனா இப்போ Generation எல்லாம் Fast Food னு soft , Refined Food ஆ சாப்பிட்டறதால தாடை அளவு சிறுசா ஆகிடுது, அதனால பல்லு முளைக்க முடியாம உள்ளேயே Lock ⬆️↖️⬅️↗️ஆகி வலி வர ஆரம்பிச்சுறுது..
இந்த மாதிரி 20-30 வயசுல Last பல்லு முளைக்கும் போது நிறைய பேருக்கு வலி வரும் , வாய் திறக்க கஷ்டமா இருக்கும், இதை Impacted wisdom tooth ணு சொல்வோம்..
உங்க பல் டாக்டர் Check பண்ணி பல்லை எடுக்கணுமா இல்ல Wait பண்ணணுமானு சொல்வாங்க.
Dr. Shiva Sankar

Dr. Shiva Sankar is the Clinical Director and Orthodontist at Sakti Dental Clinic, Tirunelveli with over 18+ years of experience in dentistry. He is also a Professor in the Department of Orthodontics, Rajas Dental College affiliated to, Dr.MGR Medical University. Dr. Shiva Sankar frequently publishes research papers in leading scientific national and international journals.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *