டாக்டர், ஒரு days முன்னாடி என் Husband க்கு பல் எடுத்து இருந்திங்க, இப்போ ரொம்ப Bleeding ஆ இருக்கு என்று பதட்டத்துடன் பேசியது எதிர் முனை..
சரியா நியாபகம் இல்லை, குறைத்தது அல்லது வருடங்களுக்கு முன் நிகழ்ந்த நிகழ்வு இது..
ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் சாப்பிடும் போது வந்த போன் கால் இது..
ராஜ சேகர் னு Retired Bank Employee என் Husband , ஞாபகம் இருக்கா டாக்டர்
ஆமா மேடம், பல் எல்லாம் ஆடுதுன்னு அதை எடுத்துட்டு Full பல் செட் பண்ணுனம் கேட்டு வந்து இருந்திங்களே
என் Husband Heart patient வேற, அதான் பயமா இருக்கு..டாக்டர்..
ஞாயிற்றுக்கிழமை கிளினிக் இருக்குமானு தெரியலயேனு உங்களுக்கு கால் பண்ணினேன்..டாக்டர்..
Sunday கிளினிக் கிடையாது மேடம், ஆனா நீங்க Emergency னு தானே கூப்படுறீங்க, நான் ஒரு minutes ல வந்து பாக்கிறேன்..
எப்படி சார் Bleeding sudden ஆ Start ஆச்சு?? என்றேன் அவரிடம்..
Lunch சாப்பிடும் போது மீன் முள்ளு ஏதோ மாட்டிகிச்சுன்னு, Tooth Pick வச்சு எடுக்க try பண்ணினேன் டாக்டர்.. அப்போ தான் bleeding வந்துச்சு..
உடனே என்ன பண்ணினிங்க சார்..
ரத்தம் வருதுனு தண்ணி வச்சு திரும்ப, திரும்ப வாய் கொப்பி்ளிச்சுகிட்டே இருந்தார், டாக்டர்…
அது தான் first தப்பு மேடம், Bleeding இருந்தா Light ஆ wash பண்ணிட்டு Cotton இல்ல Gauze வச்சு தான் அழுத்தி கடிக்கணும்..
Bleeding ஏன் Arrest ஆகாமா வந்ததுனா, Heart Problem காக சார் சாப்பிடற Aspirin Tablet னாலயும் தான்..
அதனால தான் usual ஆ பல் எடுக்கும் போது உங்க Cardiologist கிட்ட fitness வாங்கிட்டு Aspirin tablet days நிறுத்திட்டு பல் எடுக்கிறோம்..
பல் எடுத்த எடத்துல திரும்ப திரும்ப tooth pick வச்சு குத்தினதுனால , வாய் கொப்புளிச்சுகிட்டே இருந்தது, Aspirin tablet னால தான் Bleeding Stop ஆகலை..
நான் இப்போ bleeding arrest பண்ண Gauze வச்சு இருக்கேன்,இந்த tablet உம் ஒரு 2 dose சாப்பிடுங்க, பயப்பட வேண்டாம்
இதே போன்று இன்னொரு நிகழ்வு
கிளினிக் முடியும் நேரம் அவசர அவசரமாக வந்த ஒரு பல் மருத்துவம் படிக்கும் மாணவி..
*சார், Evening* extraction பண்ணி இருந்தோம்லா Ortho Treatment ,காக இப்போ வாய் full ஆ blood ஆ இருக்கு சார், Bleeding stop ஆகலை போல ….
இல்லியே சுமிதா,Clot form ஆகி இருக்கானு check பண்ணி தானே அனுப்பினோம்..
சரி , உட்காருங்க பார்ப்போம்..
பல் எடுத்த எடத்துல இருந்து Bleeding ஏதும் பெருசா வரல..Mild ooze தான்.
இது, நீங்க Saliva முழுங்காம அப்படியே வாயில் வச்சு இருந்ததால் Profuse bleeding மாதிரி தெரியுது..
நெறைய பேர் இப்படி தான் Blood ஒட கலந்த எச்சிலை முழுங்க கஷ்டப்பட்டு அப்டியே வாயில வச்சு இருப்பாங்க..
Dr. Shiva Sankar is the Clinical Director and Orthodontist at Sakti Dental Clinic, Tirunelveli with over 18+ years of experience in dentistry. He is also a Professor in the Department of Orthodontics, Rajas Dental College affiliated to, Dr.MGR Medical University. Dr. Shiva Sankar frequently publishes research papers in leading scientific national and international journals.